×

ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா-எம்எல்ஏ சீர்வரிசைகள் வழங்கினார்

ஜோலார்பேட்டை :  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எஸ் கோடியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஜோலார்பேட்டை வட்டார அளவிலான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சி.கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. சதீஷ்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், மத்திய ஒன்றிய செயலாளர் உமா கன்ரங்கம், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை வட்டார அளவில் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. இதில், துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.நாட்றம்பள்ளி:  நாட்றம்பள்ளியில் சமுதாய நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாட்றம்பள்ளி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நாட்றம்பள்ளி சடலகுட்டை முருகர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில்  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், ஜோலார்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி பேசினர். இந்நிகழ்வில், நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதிமுனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா-எம்எல்ஏ சீர்வரிசைகள் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Jolarpet ,Nadrampalli ,MLA ,Jolarbhet ,Tirupattur district ,Jolarbhet S Kodeur ,Zolarpet ,Tenderampalli ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...