×

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையருக்கு நியமன ஆணை

சென்னை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கைகளுக்கு முதல்வர் ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சென்னையில் 5 பேர், தாம்பரத்தில் 15 பேர், ஆவடியில் 10 பேர், மதுரையில் 7 பேர்,

கோயம்புத்தூரில் 7 பேர் மற்றும் திருச்சியில் 6 பேர் என மொத்தம் 50 திருநங்கைகள் காவல் துறையுடன் இணைந்து போக்குவரத்து மேலாண்மை, திருவிழா காலங்களில் கூட்டநெரிசலை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் உரிய பயிற்சிகள் வழங்கி ஊர்க்காவல் படையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், டிஜிபி வெங்கடராமன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் ஜெயஸ்ரீமுரளிதரன், குடிமை பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை தலைவர் ஜெயஸ்ரீஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Home Guard ,Chennai ,Minister Home Guard ,Tamil Nadu Home Guard ,Tambaram ,Avadi ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...