சென்னை: சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்குவதன் அடையாளமாக 20 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். அவர் பேசியதாவது:
ஒட்டுமொத்தமாக இந்த கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கக்கூடிய கிட்டத்தட்ட 900 மாணவிகளுக்கு இந்த லேப்டாப்களை கொடுக்க இருக்கின்றேன். perplexity artificial intelligence வசதியோடு இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய, பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நிச்சயம் இந்த லேப்டாப் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இன்னும் பல்வேறு திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு தர இருக்கின்றது. எனவே இந்த அரசிற்கு எப்போது நீங்கள் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, லேப்டாப் பெற்ற உங்கள் அத்தனைபேரினுடைய எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.
