திருப்பூர், ஜூன் 25: தமிழ்நாட்டில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாவல் பழம் சீசன் தொடங்கி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். நாவல் பழத்தில் அதிகமான அளவு கால்சியம் உடலுக்கு தேவையான வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் உள்ளன. இதன் காரணமாக, பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் நாவல் பழங்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். தற்போது, சீசன் துவங்கப்பட்டிருப்பதன் காரணமாக திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி மற்றும் பல்லடம் சாலை, மங்கலம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாவல் பழங்கள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திருப்பூருக்கு அதிகளவு நாவல் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. திருப்பூர் மங்கலம் சாலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கலப்பு வகையான நாவல் பழங்கள் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நாவல் பழங்கள் வகைக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது.
The post ஆந்திராவில் இருந்து விற்பனைக்கு வந்த நாவல் பழம் appeared first on Dinakaran.
