×

வாக்காளர் பெயர் சேர்த்தல் விழிப்புணர்வு

திருப்பூர், டிச. 24: திருப்பூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வருகிற ஜனவரி மாதம் 18ம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள், வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் 8 ஆகியவை மூலமாக உறுதிமொழி படிவம் உரிய ஆவணங்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட வாக்காளர் அலுவலரிடம் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு படிவம் 6 கொடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வடக்கு தாசில்தார் கண்ணாமணி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

 

Tags : Tiruppur ,Tiruppur district ,
× RELATED இந்தியா-நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்