×

முதலாம் மண்டல பாசனம் துவங்குவதற்குள் பிஏபி கால்வாய் தூர் வார உத்தரவு

உடுமலை, டிச. 24: முதலாம் மண்டல பாசனம் துவங்குவதற்குள் பிஏபி கால்வாய் தூர் வாரும் பணியை முடிக்க வேண்டும் என, கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட முதலாம் மண்டல கால்வாயில் தூர்வாரும் பணிகளுக்காக முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திருமூர்த்தி கோட்டத்தில் 44 பணிகளுக்காக ரூ. 2.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதை கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். முதலாம் மண்டல பாசனம் துவங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருமூர்த்தி கோட்ட செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் பாபு, சபரீஸ்வரன் மற்றும் உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags : Zone ,Udumalai ,Karthikeyan ,Zone 1 ,
× RELATED இந்தியா-நியூசிலாந்து இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்