×

தீபாவளி சீட்டு நடத்தி பண மோசடி செய்த மூதாட்டி கைது

திருப்பூர், டிச.27: திருப்பூர் கே.வி.ஆர். நகர் பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (60). இவர் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலித்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி அவர் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கவில்லை என தெரிகிறது.

ராமர் என்பவர் உள்பட பலரும் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கடந்த மாதம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சுமார் ரூ.15 லட்சம் வரை அவர் மோசடி செய்ததாக தெரியவந்தது. இந்தநிலையில் சாந்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags : Diwali ,Tiruppur ,Shanthi ,Palayakadu ,KVR Nagar, Tiruppur ,
× RELATED பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு