×

புதுகை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

புதுக்கோட்டை, மே 22: புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று எஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தலைமை வகித்து பேசினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். வரும் 23, 24 ஆகிய இரண்டு தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைவரும் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், அனைத்து நிர்வாகிகளிடம், கட்சி பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர். இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏ உதயசண்முகம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.

The post புதுகை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai South District DMK Executive Committee Meeting ,Pudukkottai ,South ,District Executive ,Committee ,SR Wedding Hall ,South District Secretary ,Natural Resources Minister ,Raghupathi ,Backward ,Welfare Minister ,Meiyanathan ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...