×

கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு மனஉளைச்சலில் இளம்பெண் தற்கொலை அக்காள் கணவர், மாமியாருக்கு கத்திகுத்து

திருவெறும்பூர்,டிச.23: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுள்ள கூடிய சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ. இவரது மனைவி கனிமொழி (32). இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான்பிரிட்டோ குமரேசபுரம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜான் பிரிட்டோவிற்கும் கனிமொழிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கனிமொழி அவருடைய அண்ணன் திலீப் என்பவருக்கு போன் மூலம் ஊருக்கு வந்து விடுவதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே திலீப், தனது உறவினர் ராஜேஷ், அம்மா மங்களம் மேரி ஆகியோரை அழைத்துக் கொண்டு தங்கை ஊரான கீழ முல்லக்குடிக்கு நள்ளிரவு 12.10 மணிக்கு வந்தார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பெட்ரூமில் கனிமொழி துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், கனிமொழியை கீழே இறக்கினர். அப்போது ஆத்திரத்தில் இருந்த திலீப், வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து ஜான்பீட்டர் மற்றும் அவரது அம்மாவையும் குத்தியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கனிமொழியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே கனிமொழி இறந்துவிட்டதாக கூறினார்.இச்சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தினர். கனிமொழிக்கும், ஜான்பீட்டருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் திருச்சி ஆர்டிஓ இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கத்திக்குத்தில் காயம் அடைந்த ஜான் பீட்டர், அவரது தாயார் பாத்திமா மேரி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Thiruverampur ,John Britto ,Trichy Thiruverampur ,Kanimozhi ,Janbrito Kumarezapuram ,
× RELATED கலைஞர் பல்கலைக்கு கையெழுத்திட...