- அமைச்சர்
- மன்னார்குடி
- டி.ஆர்.பி ராஜா
- மன்னார்குடி
- அமைச்சர்
- தொழில் முதலீட்டு மேம்பாடு
- மற்றும் வர்த்தகம்
மன்னார்குடி, டிச. 23: மன்னார்குடியில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆய்வு மேற்கொண்டார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா எடுத்த தொடர் முயற்சி காரணமாக மன்னார்குடியில் ரூ.46.46 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தை கடந்த அக்டோபர் மாதம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள பேருந்து நிலையத்தை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேருந்து நிலைய செயல்பாடுகள், மக்களுக்காக ஏற்ப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் மற்றும் தூய்மைப் பணிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பேருந்து நிலையத்தில் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
