திருமயம், டிச.23: அரிமளம் அருகே நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் வகையில் மக்களின் தேவை அறிந்து அனைத்து வசதிகளும் தங்கு தடை இன்றி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கே சென்று கிடைத்திட பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நாளை (24ம் தேதி) அரிமளம் அடுத்துள்ள ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இங்கு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கண் மருத்துவம், காது மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், மகேப்பேறு மற்றும் மகளிர் மருந்துவம், பொது மருத்துவம், எழும்பு, மூட்டு மருத்துவம், மூளை, நரம்பியல் மருத்துவம்,மனநலம் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்தூவம், நுரையீரல், இருதய நோய் மருத்துவம் : தோல் மருத்துவம், குழந்தைகள் நலம் மருந்துவம், பிசியோதெரபி மருத்துவம், ஆயூர்வேதா மற்றும் சித்தா மருந்துவம், எக்ஸ் ரே பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, இ சி ஜி,எக்கோ பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவங்கள் பொதுமக்களுக்கு வழங்கிட உள்ளது. எனவே திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
