- வலங்கைமான்
- சந்திரசேகரபுரம்
- அவ்வூர் இணைப்பு
- ஹரித்வாரமங்கலம்
- ஆவூர் அம்மாபேட்டை சாலை
- வலங்கைமான், திருவாரூர் மாவட்டம்
- வீராணம்…
வலங்கைமான், டிச. 23: சேதமடைந்த நிலையில் இருக்கும் சந்திரசேகரபுரம் ஆவூர் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம், ஹரித்வாரமங்கலம் மற்றும் ஆவூர் அம்மாபேட்டை சாலையினை இணைக்கும் விதமாக வீராணம் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் சாலை ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சாலை கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் இருந்து பாடகச்சேரி வழியாக இணைப்பு சாலையாகவும் உள்ளது. இந்த சாலையில் பேருந்து போக்குவரத்து இல்லாவிட்டாலும் பல்வேறு பயன்பாட்டிற்காக தினசரி இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் அறுவடை காலங்களில் நெல் மூட்டைகளை எடுத்து செல்வதற்கும், அறுவடை இயந்திரங்கள் வந்து செல்வதற்கும் இது முக்கிமான சாலையாக உள்ளது. இச்சாலை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆங்காங்கே சாலை பெயர்ந்து சாலை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அறுவடை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக பழுதடைந்த சாலையினை சீரமைக்க வேண்டும் என வீராணம் கிராமவாசிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
