×

மக்கள் குறைதீர் கூட்டம் 624 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

திருச்சி,டிச.23: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளா் நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 624 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், டிஆர்ஓ பாலாஜி, துணை ஆட்சியா் (பயிற்சி) பாரூக், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் இலக்கியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் ஜெயசித்ரகலா, மாவட்ட பழங்குடியின நல அலுவலா் ரங்கராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.

Tags : People's Grievance Redressal Meeting ,Trichy ,People's Grievance Redressal Day ,Tamil Nadu Habitat Development Board ,
× RELATED கலைஞர் பல்கலைக்கு கையெழுத்திட...