×

2026 பேரவை தேர்தல் கேரள காங்கிரஸ் தலைவர் அதிரடி மாற்றம்

புதுடெல்லி: கேரளாவில் தற்போதுள்ள அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 23ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால், அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கேரள மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள கே.சுதாகரன் மாற்றப்படலாம் என செய்திகள் வௌியாகின. இந்நிலையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள காங்கிரஸ் தலைவராக எம்எல்ஏ சன்னி ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளராக அடூர் எம்பி பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கேரள காங்கிரசின் புதிய செயல் தலைவர்களாக எம்எல்ஏ பி.சி.விஷ்ணுநாத், எம்எல்ஏ ஏ.பி.அனில் குமார் மற்றும் எம்பி ஷாபி பரம்பில் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 2026 பேரவை தேர்தல் கேரள காங்கிரஸ் தலைவர் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : 2026 Assembly Elections ,Kerala Congress ,New Delhi ,Kerala ,K. Sudhakaran ,Kerala state Congress ,Kerala… ,Dinakaran ,
× RELATED திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்