×

தேவாரம் – கோம்பை நெடுஞ்சாலையோரம் சேரும் மண்ணை அகற்ற கோரிக்கை

தேவாரம், மே 5: தேவாரம் – கோம்பை நெடுஞ்சாலை ஓரத்தில் சேரும் மணலை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், தேவாரம்-கோம்பை நெடுஞ்சாலையில் தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி, தே.சிந்தலைசேரி பகுதிகளில் சாலையோரத்தில் மணல் சேர்ந்து குவியலாக கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இரவில் செல்லும் போது, மண் குவியல்கள் சரியாக தெரியாததால் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி சறுக்கி விழுகின்றனர். மேலும் மணல் குவியலுக்காக வாகனங்கள் ஒதுங்கி செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. பகல் நேரங்களில் காற்றில் மண் தூசி பறந்து முகத்தில் அடிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலை பகுதிகளை ஆய்வு செய்து சாலையோரம் சேரும் மணலை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவாரம் – கோம்பை நெடுஞ்சாலையோரம் சேரும் மண்ணை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thevaram-Kombai highway ,Thevaram ,Kombai ,Melachinthalaiseri ,Dhamminayakkanpatti ,Lakshmi Nayakkanpatti ,De.Chinthalaiseri ,Theni ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு