- ஸ்டார் குரு அறக்கட்டளை
- குருசாமி
- மதுரை
- தலைவர் குருசாமி
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தூத்துக்குடி
- திருநெல்வேலி...
மதுரை, டிச. 23: மதுரையில் ஸ்டார் குரு சாரிடபிள் பவுண்டேஷன் சார்பில், அதன் சேர்மன் குருசாமி நேற்று 650வது நாளாக ஏழைகளுக்கு உணவு வழங்கினார். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களை உடனிருந்து கவனித்து கொள்பவர்களின் உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, கடந்த 649 நாட்களாக தினமும் 1000 பேருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், அதன் நிறுவனர் குருசாமி தினமும் விலையில்லா உணவு, குடிநீர், பழங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.
மேலும், இந்த பவுண்டேசன் சார்பில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இவற்றில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மதுரையில் வைகை ஆற்றினை சுத்தம் செய்வது, மாநகரில் சிசிடிவி கேமராக்கள் அமைத்தல், போதைப்பொருள் விழிப்புணர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் 650வது நாள் விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. ஸ்டார் குரு சாரிடபிள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி, அண்ணாநகர் காவல் சரக உதவி ஆணையர் சிவசக்தி ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஸ்டார் குரு சாரிடபிள் பவுண்டேஷன் பணியாளர்கள், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
