×

வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம், டிச.23: ராமேஸ்வரம் அமிர்தபுரத்தில் வீடுகளை சூழ்ந்து கிடக்கும் மழைநீரை நகராட்சி நிர்வாகம் அகற்றக்கோரி நேற்று ராமநாதபுரம் கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். இது குறித்து லதா கூறும்போது, ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் அமிர்தநகர் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் மழைநீர் வீடுகளை சூழ்ந்து தேங்கி கிடக்கிறது.

நீண்ட நாட்களாக கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. பள்ளி குழந்தைகள் சீருடை நனைந்து பள்ளிக்கு சென்று வரும் நிலை உள்ளது. இந்நிலையில் நகராட்சி பகுதியில் குடியிருப்பதற்கான அனைத்து முகவரி ஆவணங்கள், அடையாள அட்டைகள் உள்ளன. ஆனால் நகராட்சி நிர்வாகம் எல்லையில் இல்லை எனக் கூறி மழைநீரை அகற்ற மறுக்கின்றனர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே வீடுகளை சூழ்ந்து கிடக்கும் மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Ramanathapuram ,Ramanathapuram Collector ,Grievance Redressal Day ,Rameswaram Amritpuram ,Latha ,Amritnagar ,Rameswaram ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு