- பஹல்கம்
- ருத்ரபிரயாக்
- கேதார்நாத்
- இமாலய
- உத்தரகண்ட்
- 12 ஜோதிர்லிங்கங்கள்
- சோட்டா சார் தாம் யாத்திரை
- மந்தாகினி ஆறு
- ருத்ரபிரயாக் மாவட்டம்
ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதர்நாத் கோயில், 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், சோட்டா சார் தாம் யாத்ரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மந்தாகினி ஆற்றின் கரையில், 3,583 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோயில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் திறக்கப்பட்டு, தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு மூடப்படுகிறது. இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை நேற்று தொடங்கியது.
காலை 7 மணிக்கு கேதார்நாத் சார் தாம் யாத்திரையை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோயிலுக்கு சென்று அவர் தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கோயிலில் , முதன்மை பூசாரியால் வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜாக்கள் மற்றும் சாமந்தி உட்பட 54 வகையான பூக்கள் சுமார் 108 குவிண்டால் குவிக்கப்பட்டு கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும் கோயில் திறப்பின் போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பக்தர்கள் கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். முதல் நாளான நேற்று சுமார் 12ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் பஹல்காம் தாக்குதல் நடந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.
The post பஹல்காம் தாக்குதலுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.
