×

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 2,000 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை!!

காஷ்மீர் : காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 2,000 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரை தொடர்ந்து விசாரிக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தேடப்படும் தீவிரவாதியான ஃபரூக் அகமது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வந்துள்ளார். மற்ற தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய ஃபரூக் அகமது உதவியதாக என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. அனைத்து தீவிரவாதிகளுக்கும் காஷ்மீரில் உள்ள 15 பேர் உதவிகளைச் செய்த சந்தேகத்தில் விசாரணை நடைபெறுகிறது.

The post காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 2,000 பேரிடம் என்.ஐ.ஏ. விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : NIA ,Kashmir terror attack ,Kashmir ,Farooq Ahmed ,Pakistan ,Kashmir… ,Dinakaran ,
× RELATED 101வது பிறந்தநாள் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி