- இந்தியா
- மத்திய அமைச்சர்
- அமித் ஷா
- போபால்
- அபுயுதாயா மாஃபியா மேம்பாட்டு மாநாடு
- உள்துறை அமைச்சர்
- அமித்...
போபால்: செமி கண்டக்டர் தயாரிப்பு துறையில் இந்தியா தாமதமாக நுழைந்தாலும் விரைவில் தன்னிறைவை அடைந்து ஏற்றுமதி செய்ய தொடங்கும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். போபாலில் அபுயுதயா மபி வளர்ச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘மபியின் புவியியல்இருப்பிடம் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளது. மாநிலத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க முடியும். நாங்கள் செமி கண்டக்டர் துறையில் சற்று தாமதமாக இருந்தாலும் வலுவான நுழைவை ஏற்படுத்தியுள்ளோம். விரைவில், இந்த துறையில் தன்னிறைவு பெறுவது மட்டுமல்லாமல், அதை ஏற்றுமதி செய்யவும் தொடங்குவோம்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை அமித் ஷா தொடங்கி வைத்தார்.
