×

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்த விவகாரம்; தயவுசெய்து எங்களை வேறுமாதிரி சித்தரிக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா விளக்கம்

டெல்லி:பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயவுசெய்து எங்களை வேறுமாதிரி சித்தரிக்காதீர்கள் என இந்திய வீரர் நீரஜ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், பெங்களூருவில் நடக்கும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல்’ போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு திங்கட்கிழமை (தாக்குதலுக்கு முன்பே) அழைப்பு விடுக்கப்பட்டது.

இது ஒரு விளையாட்டு வீரனாக மற்றோரு வீரருக்கு விடுக்கப்படுட்ட அழைப்புதானே தவிர வேறேதும் கிடையாது. இத்தனை ஆண்டுகளாக எனது நாட்டை பெருமையுடன் சுமந்து விளையாடியுள்ளேன். இன்று என் தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்புவது மிகவும் வலிக்கிறது. காரணமே இன்றி என்னைப் பற்றி விளக்க வேண்டியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் மிகவும் சாதாரண மனிதர்கள்தான். தயவுசெய்து வேறுமாதிரி சித்தரிக்காதீர்கள் என அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வேதனை தெரிவித்தார்.

The post பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்த விவகாரம்; தயவுசெய்து எங்களை வேறுமாதிரி சித்தரிக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Arshad Nadeem ,Neeraj Chopra ,Delhi ,Niraj Chopra ,Bangalore ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...