×

கொச்சியில் 8வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை: வேலைப்பளுவால் சோக முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்தவர் தாமஸ். அவரது மகன் ஜேக்கப் தாமஸ் (23). பிடெக் முடித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே தனக்கு வேலைப்பளு மிகவும் அதிகமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஜேக்கப் தாமஸ், தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொச்சியில் 8வது மாடியில் இருந்து குதித்து சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை: வேலைப்பளுவால் சோக முடிவு appeared first on Dinakaran.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Thomas ,Kanchikuzhi ,Kottayam, Kerala ,Jacob Thomas ,BTech ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...