×

திருத்தேர் செல்லும் கோயில்களை சுற்றி புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவு: சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது முசிறி தொகுதி எம்எல்ஏ ந.தியாகராஜன்(திமுக) பேசுகையில், முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டியத்தில், அருள்மிகு மதுரை காளியம்மன் கோயிலில் 2 தேர்கள் ஊர்வலம் வரும். எனவே அங்கு புதைவடக் கம்பி அமைத்து தரப்படுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், “தமிழ்நாட்டில் திருத்தேர் செல்கின்ற கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், புதைவடக் கம்பிகள் அமைப்பதற்காக முக்கிய திருக்கோயில்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் முடிக்கப்பட்டிருக்கின்றன. சில கோயில்களுக்கான பணிகள் தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ள அந்தத் திருக்கோயிலுக்கான பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். தேவை ஏற்படின், நிதிநிலைக்கேற்ப நிச்சயமாக அரசு பரிசீலிக்கும்” என்றார்.

The post திருத்தேர் செல்லும் கோயில்களை சுற்றி புதைவடக் கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவு: சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruteer ,Minister ,Senthilbalaji ,Musiri ,MLA ,N. Thiagarajan ,DMK ,Arulmigu Madurai Kaliamman Temple ,Thottiyam ,Musiri Assembly ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...