×

ரூ.2 கோடி தங்க கட்டியுடன் சிறுவன் தப்பியோட்டம்: மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை: தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க கட்டியுடன் 17வயது சிறுவன் தப்பி சென்ற சம்பவம் மயிலாடுதுறையில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் டவுன் எக்ஸ்டன்சன் தெருவில் மகாராஷ்டிராவை சேர்ந்த சுகாஷ் (45) என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரிடம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடையில் சுஹாஷ் மற்றும் 17 வயது சிறுவன் மட்டும் நேற்று இருந்துள்ளனர். அப்போது ஒன்றரை கிலோ தங்க நகைகளை உருக்கி அதனை கட்டியாக மாற்றிய சுகாஷ், எடை போட்டு எடுத்து வரும்படி இரவு 8.30 மணியளவில் சிறுவனிடம் கொடுத்து அனுப்பினார்.

இதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த சிறுவன், திடீரென தங்க கட்டியுடன் ஓட்டம் பிடித்தார். இதனை கண்ட சுகாஷ், கூச்சலிட்டபடி சிறுவனை விரட்டினார். ஆனால் சிறுவன், மின்னல் வேகத்தில் தலைமறைவாகி விட்டான். இதுதொடர்பாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் சுகாஷ் புகார் கொடுத்தார்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Mayiladuthurai ,Town Extension ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு...