×

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு முழுமையான தடை எப்போது?: தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒன்றிய பாஜக அரசு எப்போது முழுமையாகத் தடை செய்யும்? என மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் ஒன்றிய அமைச்சர் தார்மீகப் பொறுப்பிலிருந்து பின்வாங்குகிறாரா?. ஆன்லைன் சூதாட்டங்களை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது; ஒன்றிய அரசு தடை செய்ய எவ்வளவு காலம் ஆகும். ஆன்லைன் சூதாட்டங்களை ஒன்றிய அரசு தடை செய்வதற்கு பதில், அதற்கு ஜிஎஸ்டியை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைன் சூதாட்டங்களுக்கு முழுமையான தடை எப்போது?: தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Delhi ,Union BJP government ,DMK Parliamentary Group ,Vice President ,Lok Sabha ,Union Minister ,Dinakaran ,
× RELATED ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே...