×

கர்நாடக துணை முதல்வர் பேசியதாக பொய் தகவல் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

புதுடெல்லி: மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கி இருக்கிறார். சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்த நோட்டீசில், ‘‘மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் அடிப்படையில் மார்ச் 24ம் தேதி அமைச்சர் ரிஜ்ஜூ அவையை தவறாக வழிநடத்தினார். சபை கூடிய சிறிது நேரத்திலேயே கிரண் ரிஜ்ஜூ கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் சொல்லாத ஒன்றை சொன்னதாக பொய்யான தகவல்களை அளித்தார். இந்த விவகாரத்தில் கிரண் ரிஜ்ஜூவின் மீது உரிமை மீறல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post கர்நாடக துணை முதல்வர் பேசியதாக பொய் தகவல் அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Deputy Chief Minister ,Kiren Rijiju ,New Delhi ,Congress ,Manickam Thakur ,Lok Sabha ,Parliamentary Affairs Minister ,Speaker ,Om Birla ,Lok Sabha… ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...