- திரிணாமுல் நிறுவன தினம்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறுகையில், ”திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எண்ணற்ற மக்களின் கருணை, அன்பு மற்றும் பிரார்த்தனைகளின் ஆசி கிடைத்துள்ளது.
மக்களின் ஆதரவை ஆதாரமாக கொண்டு எந்த தீய சக்திகளுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். மேலும் அனைத்து பகைமைகளையும் புறக்கணித்து சாமானிய மக்களுக்கான எங்கள் போராட்டம் வாழ்நாள் முழுவதும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
