புதுடெல்லி: டெல்லியின் வசந்த் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் நிஷீத் கோலி. பிவானியில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளதாக கூறும் நிஷீத் கோலி இந்திய ராணுவத்திற்கு மேம்பட்ட போர் விமானங்களுக்கான இன்ஜின்களை உருவாக்க தயாராக இருப்பதாக அரசுதுறை பாதுகாப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.
அதில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ராவை தனக்கு தெரியும் என்றும் பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலக இயக்குனர் ஏ.கே.சர்மா அளித்த புகாரை தொடர்ந்து நிஷீத் கோலி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
