×

புதுவை பேரவை: திமுக, காங்.உறுப்பினர்கள் வெளியேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். காரைக்காலில் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதால் தலைமை பொறியாளர் சிபிஐயால் நேற்று கைது செய்யப்பட்டார். தலைமை பொறியாளர் கைது விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி தர்ணா நடைபெற்றது. தர்ணாவில் ஈடுபட்டவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து அவை காவலர்கள் வெளியேற்றினர்.

The post புதுவை பேரவை: திமுக, காங்.உறுப்பினர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Kang ,CBI ,Karaikal ,Tarna ,Minister of Public Works ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...