×

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோசே நிறுவனம்; மின்னணு உற்பத்தி திட்டத்தில் ரூ.100 கோடியில் முதலீடு: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோசே நிறுவனம் மின்னணு உற்பத்தி திட்டத்தில் ரூ.100 கோடியில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. மின்னணுவியல், மின் வாகனம் மற்றும் அது சார்ந்த துறைகளிலும், மின்னணுவியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அத்துடன் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்நிலையை மேலும் மேம்படுத்திடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோசே நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் ரூ.100 கோடியில் முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மின்சார, மின்னணு இணைப்பிகள் உற்பத்தி திட்டம் அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, ஹிரோசே உற்பத்திக் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவன நிர்வாகக்குழு இயக்குநர் யோஷிஹிரோ குஞ்சி, தலைமை செயல் அலுவலர், ஆசியன் உற்பத்திக் குழுமம் கணேஸ்வரன், ஹிரோசே நிறுவனத்தின் திட்டமிடல் குழு சார்ந்த யூட்டா மியாஷிடா மற்றும் யூ ஒஹுரா மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவர் ராஜேஷ் மணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Hiroshi ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு...