சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: போர் முடிந்தாலும்கூட எரிவாயு விநியோகம் சீரடைய பல மாதங்கள் ஆகலாம். எனவே, மக்களுக்கு உதவும் இடைக்கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்கவேண்டும். மின்சார அடுப்புகளை மானிய விலையில் கிடைக்க செய்ய வேண்டும். கிராமப்புற மக்களுக்கு கூடுதலாக மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் இலவசமாக வழங்க வேண்டும். சோலார் மின்வசதி ஏற்படுத்திக்கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
தேவையான இடங்களில் மையப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்க வேண்டும். இவற்றுக்கான நிதிச்சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
