×

12 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 12 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டம் அல்லிநகரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இளவரசு தென்காசி மாவட்டம் குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காந்தி கன்னியாகுமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்டம் பாபநாசம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்டம் எஸ்ஐயூ சிஐடி பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிந்திரன் சேலம் சிறப்பு பிரிவு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பியாகவும், தேனி மாவட்டம் வீரப்பாண்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மதுரை உயர் நீதிமன்ற பாதுகப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், தஞ்சை மாவட்டம் சைபர் க்ரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவழகன் நாகப்பட்டினம் மாவட்டம் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் திருப்பூர் மாவட்டம் குற்றப்பிரிவு-2 டிஎஸ்பியாகவும், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கபிலன் சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு-2 டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் ஏசிடியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சர்க்கிள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், பாதுகாப்பு பிரிவு சிஐடி இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் காவல் நிலைய இன்ஸ்ெபக்டர் கண்ணன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DSP ,Home Secretary ,Dheeraj Kumar ,Chennai ,Tamil Nadu ,Ilavarasu ,Allinagram Police Station ,Theni district ,Crime Records Bureau ,Tenkasi district ,Ramanathapuram… ,
× RELATED வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு...