×

தட்டுப்பாடு இல்லை… யாருக்கு வேண்டும் சொல்லுங்க… காஸ் சிலிண்டர் நான் தருகிறேன்; நயினார் சவடால்; விளாசும் நெட்டிசன்கள்

சென்னை: காஸ் சிலிண்டர் யாருக்கு வேண்டும் நான் தருகிறேன் என்று நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டிக்கு, அவரது செல்போன் எண்ணை போட்டு தேவைப்படுவோர் வாங்கி கொள்ளலாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விளாசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வரும் நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியானது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அளித்து வரும் பதில்கள் சிரிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‘‘நானே ஒரு காஸ் டீலர். சிலிண்டர் பற்றாக்குறை என்பது பொய். காஸ் சிலிண்டரை பொறுத்தவரை ஒரு நபருக்கு 20 நாட்களுக்கு பிறகு தான் புக் செய்ய முடியும். சிலிண்டர் வீட்டிற்கு வருவதற்கு 30 – 40 நாட்கள் கூட ஆகலாம். இதுதான் சர்வரில் உள்ள நடைமுறை. இன்றைக்கு ஒரு சிலிண்டரை பெற்றுக் கொண்டு உடனே மீண்டும் புக் செய்தால் உங்களுக்கு கிடைக்காது. இந்த சிஸ்டமே இப்படித்தான் இயங்கும். உங்களுக்கு 20 நாட்களுக்குள் சிலிண்டர் வேண்டுமா. நானே தருகிறேன். நீங்கள் எங்கு புக் செய்கிறீர்களோ அங்கு தருகிறேன். நீங்கள் சென்னையில் எந்த பகுதி என்று சொல்லுங்கள். 20 நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு விடவில்லை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரது கருத்துக்கு பதில் கொடுத்து அவரை ஒரு வழி ஆக்கிவிட்டனர் என்றே சொல்லலாம்.

ஏனென்றால், தமிழ்நாட்டில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பதெல்லாம் பொய் என்று நயினார் நாகேந்திரன் கூறிய கருத்தை பதிவிட்டு, அவரது செல்போன் எண்ணை பதிவு செய்து (9655514444), காஸ் சிலிண்டர் தேவைப்படுவோர் அவரது எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, ‘‘யோவ் செம்பு நக்கி, வீட்ல போய் பெரியவங்க இருந்தா அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ’’ என்றும், தமிழ்நாட்டில் தான் இருக்கிறீர்களா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது நயினார் நாகேந்திரனுக்கு நெட்டிசன்கள் அளித்து வரும் பதில் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Nainar Savatal ,Chennai ,Nainar Nagendran ,
× RELATED வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு...