×

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 250 கி.வா மின்மாற்றியை கொண்ட ஒற்றை மின்கம்ப அமைப்பு தேவை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்அறிக்கை: இன்டக்சன் அடிப்படையிலான மின்சார உபகரணங்கள் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் மட்டுமே செயல்படும் என்பதால், 5 சதவிகிதம் கூடுதலாகவோ, குறைவாகவோ குறைந்த அழுத்த மின்சாரத்தில் ஏற்படும் மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும். சிலிண்டர் தட்டுப் பாட்டை சமாளிக்க, குறைவான மின் தடைகள் மற்றும் தரமான மின்னழுத்த விநியோகத்திற்காக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மின்கடத்தி பாதைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். கேபிள்கள் அதிக வெப்பமடைவதையும், மின் இணைப்புகள் தீப்பற்றி எரிவதையும் தடுக்க மின் விநியோக கட்டுப்பாட்டு பெட்டிகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

மின் மாற்றி அமைக்கும் இடத்தின் தேவையை குறைப்பதற்காக கர்நாடகத்தில் உள்ளதைப் போல 250 கி.வா. மின்மாற்றியைக் கொண்ட ஒற்றை மின்கம்ப அமைப்பு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட பரிந்துரைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழ்நாடு மின்துறை அமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Selvapperuntaka ,Chennai ,Tamil Nadu ,Congress ,
× RELATED வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு...