×

சட்டீஸ்கர் மாஜி முதல்வர் வீட்டில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும் முன்னாள் முதல்வருமான புபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகலுக்கு எதிரான மதுபான ஊழல் வழக்கு தொடர்பான பணமோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் புபேஷ் பாகல் மற்றும் அவரது மகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். புபேஷ் பாகல், அவரது மகன் ஆகியோர் இருக்கும் வீடு உட்பட 13 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின்போது ரூ.30லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை பாகலின் வீட்டில் இருந்து புறப்படும்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 பேர் அதிகாரிகளின் வாகனத்தை நிறுத்தி அதன் மீது ஏறியுள்ளனர். மேலும் கல் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் துர்க் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

The post சட்டீஸ்கர் மாஜி முதல்வர் வீட்டில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனம் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Chhattisgarh ,CM ,Raipur ,Chaitanya Bagal ,Congress ,Chief Minister ,Bhupesh Bagal ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது