×

எஸ்டிபிஐ அலுவலகங்களில் ஈடி சோதனை

புதுடெல்லி: எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவராக எம்.கே.பைசி செயல்பட்டு வருகிறார். பைசி மீது பணமோசடி புகார் எழுந்ததையடுத்து கடந்த மாதம் 28ம் தேதி கேரளாவிலுள்ள பைசியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக பைசி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம், ஆந்திராவின் நந்தியால், ஜார்க்கண்டில் பாகூர், மகாராஷ்டிராவில் தானே, மேலும் சென்னை, பெங்களுரூ, டெல்லி, கொல்கத்தாவில் ஈடி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

 

The post எஸ்டிபிஐ அலுவலகங்களில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Tags : ED ,STBI ,New Delhi ,MK Paisi ,Enforcement Directorate ,Paisi ,Kerala ,STBI… ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...