சென்னை: மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைந்தபோதே தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டதாக ஆனால், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக கூறவில்லை என எடப்பாடி நேற்று பேட்டி அளித்தார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் இல்லை என எடப்பாடி பழனிசாமி கைவிரித்ததால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. சத்தியம் வெல்லும்; நாளை நமதே! என விஜயகாந்தின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. எடப்பாடிக்கு பதிலடி தரும் வகையில் தேமுதிக பதிவிட்டதாக கருதப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே பதிவு நீக்கப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடியின் சார்பில் பிரேமலதாவை தொடர்புகொண்டு பேசிய அதிமுக மூத்த தலைவர்கள் பேசியதாக தகவல் வெளியாகியது.
The post மாநிலங்களவை எம்.பி. பதவி விவகாரத்தில் தேமுதிகவை சமாதானப்படுத்த அதிமுக முயற்சிப்பதாக தகவல்..!! appeared first on Dinakaran.
