×

பிட்காயின் மோசடி வழக்கில் ரூ23 கோடி மதிப்பு கிரிப்டோகரன்சி பறிமுதல்


புதுடெல்லி: கெயின் பிட்காயின் வழக்குகள் தொடர்பாக நேற்று முன்தினம் நாடு தழுவிய அளவில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். டெல்லி, புனே, நாந்தேட், கோலாப்பூர், மும்பை, பெங்களூரு, சண்டிகர், மொஹாலி, ஜான்சி மற்றும் ஹூப்ளி உட்பட சுமார் 60 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று முடிவடைந்த இந்த சோதனையின்போது சிபிஐ அதிகாரிகள் குற்றவியல் ஆதாரங்கள்,ரூ.23.94கோடிக்கும் மேல் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகள், 34 மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க், 12 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இது கிரிப்டோகரன்சியின் மோசடி அளவை வெளிப்படுத்தி உள்ளது. சர்வதேச பரிவர்த்தனைகள் தொடர்பான கூடுதல் விவரங்களை கண்டறிவதற்காக தடயவியல் பகுப்பாய்விற்கு மின்னணு சாதனங்களை சிபிஐ அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

The post பிட்காயின் மோசடி வழக்கில் ரூ23 கோடி மதிப்பு கிரிப்டோகரன்சி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,CBI ,Delhi ,Pune ,Nanded ,Kolhapur ,Mumbai ,Bengaluru ,Chandigarh ,Mohali ,Jhansi ,Hubli… ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...