×

சிலை கடத்தல் வழக்கில் தமிழக மாஜி டிஎஸ்பி மனு தள்ளுபடி


புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தான் கைது செய்யப்பட்டதாக கூறி ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் டி.எஸ்.பி காதர் பாட்சா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காதர் பாட்ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘வழக்கை சி.பி.ஐ விசாரிப்பதால், இந்த மனுவை தொடர விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post சிலை கடத்தல் வழக்கில் தமிழக மாஜி டிஎஸ்பி மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : MAJI ,New Delhi ,Chennai High Court ,T.D. Manikavel ,Manikavel S. P Kadar Bhatsa ,Supreme Court ,Chief Justice ,Tamil Maji DSP ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது