×

சீர்காழி அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சீர்காழி,பிப்.12: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் கிராமத்தில் சாயாவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் காசிக்கு இணையான கோயில்களில் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பூம்புகார் கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வில்லேந்திய வேலவர் சுவாமி தனி சன்னதியில் எழுந்துருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு அந்த பகுதி மக்கள் விரதம் இருந்து பால் காவடி, பால்குடம், அலகு காவடி ஆகியவற்றை மேளம், தாளம் முழங்கிட ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதை அடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சாயாவனம் கிராமவாசிகள்பக்தர்கள் செய்திருந்தனர்.

The post சீர்காழி அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Sayavanam Sayavaneswarar Swamy Temple ,Sirkazhi ,Sayavaneswarar Temple ,Sayavanam ,Mayiladuthurai district ,Kasi ,Villendiya Velavar Swamy ,Poompuhar sea ,
× RELATED ஓய்வூதியர் தின விழா