×

யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு மக்கள் பணத்தை செலவிடுவது அவசியமா?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி காட்டம்


புதுடெல்லி: மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், மக்களவையின் செயல்பாடுகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு சமஸ்கிருதம் உட்பட 22 இந்திய மொழிகளில் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மத்திய சென்னை எம்.பியுமான தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘நீங்கள் மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது நிச்சயமாக வரவேற்கத்தக்கது. ஆனால், எந்த மாநிலம் சமஸ்கிருதத்தை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளது? பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்திற்காக ஏன் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறீர்கள்?

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் யாரும் சமஸ்கிருத மொழியை பயன்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வெறும் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாகக் கூறப்படுகிறது. இந்த தரவு இருக்கும்போது, உங்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்காக ஏன் பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டும்? என்று பேசினார்.

The post யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு மக்கள் பணத்தை செலவிடுவது அவசியமா?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Dayanidhi Maran ,Lok Sabha ,New Delhi ,Speaker ,Om Birla ,DMK ,Parliamentary ,Party ,Vice President ,Central Chennai ,MP… ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...