×

மன்மோகன் ஆட்சியில் டாலரின் மாற்று மதிப்பு 68ஆக இருந்த நிலையில் பாஜக ஆட்சியில் 86ஆக சரிந்துவிட்டது : திமுக எம்.பி. தயாநிதி மாறன் உரை

டெல்லி :மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் தயாநிதி மாறன் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பொருட்களுக்கான தேவைப்பாடு குறைவு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் முடங்கியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 87.33ஆக சரிந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. மன்மோகன் ஆட்சியில் டாலரின் மாற்று மதிப்பு 68ஆக இருந்த நிலையில் பாஜக ஆட்சியில் 86ஆக சரிந்துவிட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மன்மோகன் ஆட்சியில் டாலரின் மாற்று மதிப்பு 68ஆக இருந்த நிலையில் பாஜக ஆட்சியில் 86ஆக சரிந்துவிட்டது : திமுக எம்.பி. தயாநிதி மாறன் உரை appeared first on Dinakaran.

Tags : Dimuka M. B. Thayanidi Maran ,Delhi ,Deputy Speaker ,Dimuka Parliament Committee ,Dayaniti Maran ,Malakawa ,EU government ,BJP ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...