டேராடூன்: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாஜக மாஜி அமைச்சரின் மகளிடம் ரூ.4 கோடி மோசடி செய்த தயாரிப்பாளர் தம்பதி மீதும் டேராடூன் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கின் மகளும், நடிகையுமான ஆருஷி நிஷாங்க், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் போலீசிடம் அளித்த புகாரில், ‘சினிமா தயாரிப்பாளர் தம்பதியான மன்சி – வருண் பாக்லா ஆகியோர் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் ஷானயா கபூர் நடித்த ‘ஆங்கோன் கி குஸ்தாகியான்’ என்ற படத்தை தயாரித்தனர்.
தங்களை மினி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் என்று என்னிடம் கூறினர். அந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறினர். மேற்கண்ட திரைப்படத்தில் முதலீடு செய்வதற்காக என்னிடம் ரூ. 5 கோடி கேட்டனர். திரைப்படத்தின் லாபத்தில் 20% பங்கும், ரூ.15 கோடிக்கு மேல் இருக்கும் என்று உறுதியளித்தனர். எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரம் மக்கள் முன் எடுபடவில்லை என்றால், நான் முதலீடு செய்த பணத்தில் 15 சதவீதம் வட்டியுடன் திருப்பித் தருவதாக உறுதியளித்தனர்.
அவர்கள் கூறியபடி கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி இரு தரப்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்கு அடுத்த நாள், அவர்களுக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தேன். அடுத்த சில வாரங்களில், அதாவது அக்டோபர் 27, அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் தவணை முறையாக மொத்தம் 4 கோடி ரூபாய் வழங்கினேன். மொத்தம் ரூ. 4 கோடி பெற்றுக் கொண்ட அவர்கள், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். மேலும் அந்தப் படத்தில் எனக்கான ஸ்கிரிப்டை இறுதி செய்யவில்லை. இறுதியாக அந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதனால் அவர்களிடம் நான் முதலீடு செய்த பணத்தைத் திரும்பக் கேட்டேன்.
ஆனால் பணத்தை திருப்பித் தர மறுத்துவிட்டனர். மாறாக எனக்கு பதிலாக மற்றொரு நடிகையை தேர்வு செய்து படத்தை எடுத்து
The post சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாஜக மாஜி அமைச்சரின் மகளிடம் ரூ.4 கோடி மோசடி: தயாரிப்பாளர் தம்பதி மீதும் டேராடூன் போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.
