×

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!

டெல்லி: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளின் பட்டியலில் ஜனநாயகன் பட வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வில் ஜனநாயகன் பட வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தணிக்கை சான்று வழங்காததால் ஜனநாயகன் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Democrat ,Vijay ,Supreme Court ,Delhi ,Deepankar Dutta ,Augustine George Masih ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...