×

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்: இலங்கை அதிபர்


யாழ்ப்பாணம்: ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி அளித்துள்ளார். அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக யாழ்ப்பாணம் சென்றார். போர் தொடங்கிய சூழலின்போது தமிழ் மக்களின் நிலங்களை இலங்கை ராணுவம் கையகப்படுத்தியது. 2009ல் போர் முடிவுக்கு வந்த பிறகு 2015 முதல் குறிப்பிட்ட சில நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

The post ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக திருப்பித் தரப்படும்: இலங்கை அதிபர் appeared first on Dinakaran.

Tags : Tamils ,Chancellor ,Sri Lanka ,Jaffna ,Sri ,Lanka ,President ,Anura Kumara Dissanayake ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...