×

வாக்குப்பதிவு – வீடியோ காட்சிகளை பாதுகாக்க ஆணை

டெல்லி: வாக்குப்பதிவின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,200ல் இருந்து 1,500 உயர்த்தப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வாக்காளர் எண்ணிக்கையை 1,500ஆக உயர்த்தும்போது ஏற்படும் சூழ்நிலையை எப்படி சமாளிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்; தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீடியோ காட்சிகளை பாதுகாத்து வைத்திருக்க தேவையில்லை என அண்மையில் தேர்தல் ஆணையம் புதிய விதிமுறை வெளியிட்டது.

The post வாக்குப்பதிவு – வீடியோ காட்சிகளை பாதுகாக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Supreme Court ,Chief Justice ,Sanjiv Khanna… ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...