புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை வரும் 15ம் தேதி கடற்படையில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் சூரத், நீல்கிரி ஆகிய போர் கப்பல்கள், வாக்ஷீர் என்ற நீர்மூழ்கி கப்பல் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மூன்று கப்பல்களும் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன. இதில், சூரத் போர் கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும்.நீல்கிரி போர் கப்பல் ரகசியமாக பயணித்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
ஸ்கார்பீன் பிரிவு திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர் ஆகிய 3 கப்பல்களும் வரும் 15ம் தேதி மும்பையில் நடக்கும் விழாவில் கப்பல் படையில் இணைகின்றன. இந்த வரலாற்று நிகழ்வு இந்திய கடற்படையின் போர் திறனுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் அதே வேளையில், உள்நாட்டிலேயே கப்பல் கட்டுவதில் நாட்டின் தலைசிறந்த தொழில் திறன் நிலையை காட்டுகிறது. இது பாதுகாப்பு உற்பத்தியில் உலகளாவிய தலைமையகமாக இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்துகிறது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 2 போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல் 15ம் தேதி கடற்படையில் சேர்ப்பு appeared first on Dinakaran.
