×

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள் மேப் பார்த்து தவறுதலாக சென்றார்.

நாடகக்குழு மலையம்பாடி, கெளகாவில் எஸ் வளைவில் வந்து கொண்டிருந்த போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுல்தான் பத்தேரி செல்லும் வழியில் இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காயங்குளத்தைச் சேர்ந்த அஞ்சலி (32) மற்றும் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காயம் அடைந்த 9 பேர் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ் மரத்தில் மோதி நின்ற நிலையில் பேருந்து முன்பக்கத்தில் அமர்ந்திருந்த இருவர் பலியாகினர் என கூறினர்.

The post கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பேருந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Katnapalli ,Paimankulam Deva Communications Company ,Dinakaran ,
× RELATED கண்ணூரில் தண்டவாளத்தில் படுத்து...