- போச்சம்பள்ளி
- போலீஸ் சல்யூட் தினம்
- தமிழ்நாடு சிறப்புக் காவல் படை
- போச்சம்பள்ளி சமத்துவபுரம்
- படைப்பிரிவு
- தளபதி
- சங்கு
- தின மலர்
போச்சம்பள்ளி, அக்.22: போச்சம்பள்ளி சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7வது அணியில், நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பட்டாலியன் தளவாய் சங்கு தலைமை தாங்கினார். இதில் 21 குண்டுகள் முழங்க உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பட்டாலியனில் பயிற்சி காவலராக இருந்த மணிகண்டன் உடல் நலக்குறைவால் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு காவலர்கள் நிதியாக ₹2.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. துணை தளவாய் வெங்கடாசலம், உதவி தளவாய் மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், சத்தியமாலா, எஸ்ஐக்கள் செல்வகணபதி, கிருஷ்ணகுமார், கார்த்திக், தேவேந்திரன், பூவரன், கவுசல்யா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
The post பட்டாலியன் பயிற்சி காவலர் குடும்பத்தினருக்கு ₹2.81 லட்சம் நிதி appeared first on Dinakaran.