கிருஷ்ணகிரி, டிச.31: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் 395 மனுக்களை வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 395 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (தனி) பவனந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தர்ராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மக்கள் குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.